புகையிரத நிலையத்திற்குள் பாய்ந்த கார்; பறிபோன உயிர்

0
465

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த விரைவு புகையிரதத்தில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கம்பஹா – யாகொட புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தின்போது கார் சாரதி மாத்திரம் பயணித்ததாகவும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பற்ற ரயில் கடவை

குறித்த பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையால் பயணித்த கார் ரயிலுடன் மோதிய சாரதி உயிரிழந்துள்ளார்.

புகையிரத நிலையத்திற்குள் பாய்ந்த கார்; நேர்ந்த விபரீதம் (Photos) | Cars That Flowed Into The Train Track

மேலும் புகையிரதத்தில் மோதப்பட்ட கார் புகையிரத நிலைய மேடை வரை இழுத்துவரப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.   

புகையிரத நிலையத்திற்குள் பாய்ந்த கார்; நேர்ந்த விபரீதம் (Photos) | Cars That Flowed Into The Train Track