விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற ஒடிசா நடிகர் நடிகைக்கு அபராதம்!

0
648

ஒடிசாவை சேர்ந்த நடிகர் அபினவ் மொகந்தி மற்றும் அதே மாநிலத்தை சேர்ந்த நடிகையான வர்ஷா பிரியதர்ஷினியும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

அபினவ் மொகந்தி பிஜூ ஜனதா தளம் சார்பில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாகவும் உள்ளார்.

இதனிடையே, கணவன் மனைவியான அபினவ், பிரியதர்ஷினி இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இதையடுத்து, இருவரும் ஒருவர் மீது ஒருவர் பொலிஸில் முறைப்பாடு அளித்தனர். வரதட்சனை கொடுமை, குடும்ப வன்முறை என பல்வேறு பிரிவுகளில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் முறைப்பாடு அளித்தனர்.

மேலும், பிரியதர்ஷினியிடமிருந்து தனக்கு விவாகரத்து கோரி 2020-ம் ஆண்டு அபினவ் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு டெல்லி கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.

பின்னர், உயர் நீதிமன்றத்தில் தலையீட்டிற்கு பின்னர் இந்த வழக்கு ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள குடும்பநல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து விசாரணை பல மாதங்களாக நடந்து வந்த நிலையில் விசாரணைக்கு அபினவ் மற்றும் பிரியதர்ஷினி சரிவர ஒத்துழைக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுத்த வண்ணம் இருந்தன.

விவாகரத்து ரத்து தொடர்பான மனுவில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என இருவரும் மாறி மாறி கூடுதல் அவகாசங்களை கேட்டு வருகின்றனர். அதேவேளை ஒருவர் மீது ஒருவர் மீண்டும் பொலிஸில் முறைப்பாடு கொடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று கட்டாக் குடும்ப நீதிமன்றில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, விவாகரத்து வழக்கில் சரியாக ஒத்துழைப்பு அளிக்காமல் விசாரணையை தாமதபடுத்துவதாக கூறி எம்.பி.யும், நடிகருமான அபினவ் மொகந்திக்கும் அவரது மனைவியும் நடிகையுமான வர்ஷா பிரியதர்ஷினியும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.