காங்கோ ஜனநாயக குடியரசில் திறப்பு விழாவில் திடீரென இடிந்து விழுந்த பாலம்!

0
557

காங்கோ ஜனநாயக குடியரசில் ஆற்றுப் பாலத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியின் போதே புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

காங்கோ ஜனநாயக குடியரசில் உள்ளூர் மக்கள் மழைக் காலத்தில் ஆற்றினை பாதுகாப்பாக கடப்பதற்காக கட்டப்பட்ட புதிய ஆற்றுப் பாலம் திறப்பு நிகழ்ச்சியின் போதே இடிந்து விழுந்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

திறப்பு விழாவில் திடீரென  இடிந்து விழுந்த பாலம்! | Bridge Suddenly Collapsed Opening Ceremony

இதுத் தொடர்பாக உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள தகவலில் பாலத்திற்கு முன்பு கட்டப்பட்டு இருந்த தற்காலிக அமைப்பு தொடர்ச்சியாக அடிக்கடி உடைந்து வந்தாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் திறப்பு விழாவில் பாலம் இடிந்து விழும் காட்சிகள் பரவி வருவதுடன் சம்பந்தப்பட்ட கட்டிட நிறுவனத்தை கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

அந்த வீடியோவில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் அதிகாரிகள் நின்ற நிலையில் பெண் அதிகாரி ஒருவர் சிவப்பு ரிப்பனை கட் செய்வதற்காக கத்தரிக்கோலை எடுத்து நீட்டிய போது பாலம் திடிரென இடிந்து விழுந்தது.

எனினும் நல்ல வேளையாக அதிகாரிகள் யாரும் தரையில் மோதாமல் தப்பிக்க, பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அனைவரையும் மீட்டதாக கூறப்படும் நிலையில் குறித்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

திறப்பு விழாவில் திடீரென  இடிந்து விழுந்த பாலம்! | Bridge Suddenly Collapsed Opening Ceremony