உயிரிழந்த எம்.பி அத்துகோரலவின் மனைவி பிள்ளைகளை சந்தித்த ஜனாதிபதி!

0
419

மே 9 ஆம் திகதி நிட்டம்புவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பொலன்னறுவை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் குடும்பத்தினரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சதித்துள்ளார்.

அமரகீர்த்தி அத்துகோரலவின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தனர்.

உயிரிழந்த எம் பி இன் மனைவி பிள்ளைகளை சந்தித்தார்  ஜனாதிபதி ரணில்! | President Ranil Met Deceased M P Family

இதன்போது எம் பி அமரகீர்த்தி அத்துகோரலவின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த ஜனாதிபதி ரணில், பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட உதவிகள் ஏதேனும் இருப்பின் தமக்கு அறிவிக்குமாறும் தெரிவித்தார்.

எதிர் காலத்திற்கு உதவி

அத்துடன் அத்துகோரலவின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் குடும்ப நலனுக்காகவும் அரசாங்கத்தின் உதவித்தொகையின் கீழ் தனிப்பட்ட ரீதியில் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் சார்பாக எந்தவொரு உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதேவேளை அண்மையில் உயிரிழந்த அமரகீர்த்தி அத்துகோரலவின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் பொலிஸ் சார்ஜன்ட் ஜயந்த குணவர்தனவுக்கும் பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து ஜனாதிபதி நிதியுதவி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.