தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விக்ரம் ஆரம்பத்தில் இருந்ததை போலவே இன்னும் திரைப்படங்களில் இளமை துள்ளலோடு நடித்து வருகிறார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் பணிகள் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் படத்தின் பணிகள் தொடங்கியது.
இயக்குனர் கவுதம் மேனனின் அறிவிப்பு
இந்த படத்தை வருகின்ற டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டிருப்பதாக இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதம் இப்படம் வெளியானால் இது விக்ரம் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் நான்காவது படமாக அமையும் என்று கூறப்படுகிறது.
தற்போது தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாகும் படம் ஒன்றில் நடிக்க விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த இருமொழி திரைப்படத்தை லூசியா மற்றும் யூ-டர்ன் போன்ற படங்களை இயக்கிய கன்னட இயக்குனர் பவன் குமார் இயக்குவதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இதுகுறித்த அதிகார்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை, இந்த செய்தி உறுதியாகும் பட்சத்தில் விக்ரம் கன்னட திறையுலகில் எண்ட்ரியாகும் முதல் படமாக இது அமையும்.