கனடாவில் தங்க இடமில்லாதவர்களுக்காக கோவிலைத் திறந்து கொடுக்கும் இந்தியர்கள்

0
350

தங்க இடமின்றித் தவிக்கும் சர்வதேச மாணவர்களுக்காக சீக்கிய கோவிலையே திறந்து கொடுத்திருக்கிறார்கள் சில இந்தியர்கள்.

ஏற்கனவே நெருக்கடி அதிகமுள்ள வடக்கு ஒன்ராறியோவை நோக்கி உயர் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் ஏராளம் பேர் வருகிறார்களாம்.

அப்படி பிள்ளைகள் வரும்போது அவர்களுக்கு தங்குவதற்கு அறைகள் கிடைக்கவில்லையென்றால் இந்தியா மற்றும் ஐக்கிய அமீரகத்திலுள்ள அவர்களுடைய பெற்றோர் Timmins என்ற இடத்திலுள்ள சீக்கிய கோவில் ஒன்றை அழைக்கிறார்களாம். அவர்கள் எப்படியும் நம் பிள்ளைகளுக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கை பெற்றோருக்கு.

கனடாவில் தங்க இடமில்லாதவர்களுக்காக கோவிலைத் திறந்துகொடுக்கும் இந்தியர்கள்... கூறும் காரணம் | Indians Opening The Temple

அவர்கள் நம்புவது போலவே சீக்கியர்கள் நடத்தும் தொண்டு நிறுவனம் ஒன்றின் அறங்காவலர்களில் ஒருவரும் இயக்குநருமான Kanwaljit Bains தங்கள் கோவிலில் உள்ள அறைகளை இந்த பிள்ளைகளுக்காக திறந்து கொடுப்பதாகத் தெரிவிக்கிறார். இடம் போதாத அளவுக்கு மாணவர்கள் வந்துவிட்டால் கோவிலில் முக்கிய அறையைக் கூட திறந்து கொடுத்து அதில் மெத்தைகளைப் போட்டு பிள்ளைகளை தங்கவைக்கிறார்கள் அந்த கோவிலின் பொறுப்பாளர்கள்.

அதேபோல, Greater Sudburyயிலுள்ள Voice of North என்னும் சீக்கிய அமைப்பும் மாணவர்கள் தங்கும் இடங்களைக் கண்டறிய உதவுகிறது.

நாங்களும் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் தான். ஆகவே, புதிதாக வந்தவர்கள், மாணவர்களுக்கான கூட்டமைப்பை அடைய அவர்களுக்கு நாங்கள் வழிகாட்டுகிறோம் என்கிறார் Voice of North என்னும் அமைப்பைச் சேர்ந்த சீக்கியரான Harshpreet Batra.  

கனடாவில் தங்க இடமில்லாதவர்களுக்காக கோவிலைத் திறந்துகொடுக்கும் இந்தியர்கள்... கூறும் காரணம் | Indians Opening The Temple