மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு (Najib Razak) 12 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து மலேசிய உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மலேசியாவில் நஜிப் ரசாக் பிரதமராக இருந்த போது அந்நாட்டின் அரசு முதலீட்டு நிதி அமைப்பான 1 எம்.டி.பி. நிறுவனத்தில் 4,500 கோடி ரூபாய் ஊழல் செய்ததற்காக நஜிப் ரசாக்கிற்கு (Najib Razak) 12 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 1MDB மோசடிக்கான மேல்முறையீட்டு வழக்கில் தமக்கு நியாயமான தீர்ப்பு வழங்கப்படவில்லை என்று மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் (Najib Razak) தெரிவித்துள்ளார்.
அதோடு தாம் முன்வைத்த விவாதத்தின் கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் நஜிப் (Najib Razak) விதிக்கப்பட்ட 12 ஆண்டுச் சிறைத் தண்டனையை நிறைவேற்ற காஜாங் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவரது மருமகளான நூர் ஷர்மிளா ஷாஹீன் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
நீதிமன்றத்திலிருந்து நஜிப் (Najib Razak) காவல்துறைக் காரில் சிறைக்குக் கொண்டு செல்லப்படும் காட்சிகள் காணொளியாகவும் படங்களாகவும் வெளியிடப்பட்டன.