இயேசுவின் மறு அவதாரம் என்று கூறி தனி ஊர் உருவாக்கியவர்!

0
665

செர்கே டோரோப் (Sergei Torop) என்பவர் தெற்கு ரஷ்யாவில் 1961 ஜனவரியில் பிறந்த இவர் இயேசுவின் மறுபிறவி எனக் கூறிக் கொண்டு தனி ஊரை உருவாக்கியுள்ளார்.

சோவியத் ரஷ்யாவில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரியாக பணியாற்றிய இவர் 1989ஆம் ஆண்டில் அரசு வேலையை உதறிவிட்டு இறைபணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இயேசுவின் மறுபிறவி எனக் கூறி தனி ஊரை உருவாக்கிய நபர்! | Serge Dorop Who Claims To Be The Reincarnation

இவர் இயேசுநாதரைப் போல் வெள்ளை நிற அங்கி மற்றும் நீண்ட தலைமுடியுடன் காட்சியளித்து சீடர்களுக்கு போதித்து வந்துள்ளார்.

அத்தோடு இவர் “தான் கடவுள் அல்ல, இயேசுவும் கடவுள் அல்ல; கடவுளின் வார்த்தையே நான்” என்ற அவரது வார்த்தையில் வெளிநாட்டினரை வசியப்படுத்தியுள்ளார்.

இயேசுவின் மறுபிறவி எனக் கூறி தனி ஊரை உருவாக்கிய நபர்! | Serge Dorop Who Claims To Be The Reincarnation

டிசம்பர் 25ஆம் திகதிக்கு பதிலாக இவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது செர்கோ டோரோப்பின் பிறந்தநாளான ஜனவரி 14 ஆம் திகதி ஆகும். சைபீரியாவில் மட்டுமே இவரது சீடர்களின் எண்ணிக்கை சுமார் 7 ஆயிரம். சீடர்களை ஒருங்கிணைத்து அவர்களிடம் வாங்கிய நன்கொடைகள் மூலம் தனி ஓர் ஊரை உருவாக்கியுள்ளார் செர்கே டோரோப்.

அவரது ஊரில் புலால், மது மற்றும் பணத்தை பயன்படுத்த அனுமதி இல்லை என்றாலும் அவர் மட்டும் பக்தர்களிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு தனி சிம்மாசனம் அதன் முன்பு ஒரு மைக் என பிரசங்கத்தை நடத்தி வந்துள்ளார்.

சட்டத்திற்கு புறம்பான மத அமைப்பு நடத்தியது, பாலியல் அத்துமீறல், பண மோசடி என புகார்கள் அவர் மீது தொடுக்கப்பட்ட நிலையில் 2020 செப்டம்பரில் செர்கேவை ரஷ்ய பொலிஸ் கைது செய்துள்ளது.