உலகம் முழுவதும் ட்விட்டர் திடீரென முடங்கியது!

0
928

நேற்றைய தினம் (14-07-2022) பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் உலகம் முழுவதும் பல நாடுகளில் திடீரென முடங்கியது.

நேற்று மாலை 5.30 மணி அளவில் உலகம் முழுவதும் டுவிட்டர் சேவையை அணுக முடியவில்லை என்ற புகார்கள் எழுந்தன.

பின்னர் சிறிது நிமிடங்களில் (5:46 மணிக்கு) சுமார் 55,000 பயனர்களுக்கு டுவிட்டர் செயல் இழந்ததாக செயலிழப்பு கண்காணிப்பு வலைத்தளமான “டவுன்டிடெக்டார்” தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மாலை 6.10 மணி வரை சுமார் 477 டுவிட்டர் கணக்குகள் முடங்கியதாக “டவுன்டிடெக்டார்” தெரிவித்துள்ளது.

உலக முழுவதும் திடீரென முடங்கிய டுவிட்டர்! | Twitter Is Suddenly Paralyzed All Over The World

பாகிஸ்தான், பிரித்தானியா, அமெரிக்கா, பிரேசில் மற்றும் இத்தாலியிலும் இன்று பயனர்களுக்கு டுவிட்டர் முடங்கியது. சில நிமிடங்கள் மட்டுமே செயலிழந்த டுவிட்டர் சேவை பின்னர் மீண்டும் வழக்கம் போல செயல்பட தொடங்கியது.