உலக மக்களின் கஸ்டங்களை புரிந்து கொண்டு 20 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், பிரபல சமூக சேவையாளருமான பில் கேட்ஸ் அறிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று தாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஏதுக்களினால் உலக முழுவதிலும் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக இவ்வாறு தனது அறக்கட்டளை ஊடாக 20 பில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய அறக்கட்டறைகளில் ஒன்றாக பில் மற்றும் மிலின்டா அறக்கட்டளை இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வருடாந்த நிதி ஒதுக்கீட்டை ஐம்பது வீதத்தினால் உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி, வறுமை ஒழிப்பு, தடுக்கக் கூடிய நோய்களை கட்டுப்படுத்தல், பால்நிலை சமத்துவம் போன்ற பல்வேறு விடயங்களுக்காக கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய பில்கேட்ஸ் மற்றும் மலினா அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் உக்ரைன் ரஸ்ய போர் ஆரம்பமானது முதல் இதுவரையில் 71 மில்லியன் மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
குறிப்பாக உணவு மற்றும் சக்தி வளங்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினால் இவ்வாறான ஓர் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது.
வறுமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் உதவிகளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக அறக்கட்டறையின் இணைத் தலைவரான மிலின்டா கேட்ஸ் தெரிவித்துள்ளார்.