‘தாத்தா கம் ஹோம்’ என பிள்ளைகள் தமிக்கவுக்கு எச்சரிக்கை!

0
307

அமைச்சு பதவியில் இருந்து நாட்டில் மாற்றத்தை செய்யத் தவறினால் ‘தாத்தா கம் ஹோம்’ என பதாகை ஏந்தப்படும் என தனது பிள்ளைகள் தம்மை எச்சரித்துள்ளதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் 6 மாதங்களில் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே தமது இலக்கு என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் பசியை போக்கு முடியவில்லை என்றால் அதிகாரத்தில் இருந்து அர்த்தமில்லை என தனது தாய் தெரிவித்ததாகவும் அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

டொலர்களை உள்ளீர்ப்பதற்கான வழிமுறைகளையும் பட்டியலிட்டுள்ளார். வங்குரோத்தடைந்த கம்பனிகளை பொறுப்பேற்று அதனை கட்டியெழுப்பும் நிர்வாகதிறன் என்னிடமுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சவாலையும் வெற்றிகொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். நாட்டு மக்கள் பசியில் இருக்கும் போது நான் மட்டும் உண்பதில் அர்த்தம் இல்லை.

ஆக, சென்று எதையாவது செய் என கூறியே அம்மா என்னை நாடாளுமன்றம் அனுப்பி வைத்தார். அத்துடன் அதனை 6 மாதங்களுக்குள் செய்ய முடியாவிட்டால் அமைச்சு துறக்குமாறு மனைவி அறிவுரை கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

6 மாதங்களே அவகாசம்; தாத்தா கம் ஹோம் ; தமிக்கவுக்கு எச்சரிக்கை! | Grandfather Come Home Warning To Tamika

அதேவேளை அமைச்சு பதவியில் இருந்து நாட்டில் மாற்றத்தை செய்யத் தவறினால் ‘தாத்தா கம் ஹோம்’ என பதாகை ஏந்தப்படும் என பிள்ளைகளும் எச்சரித்துள்ளனர். அந்தவகையில் எனக்கான காலம் 6 மாதங்கள்.

அதாவது 960 மணித்தியாலங்களே எனக்கு வேலை செய்வதற்கான நேரம். அந்த காலப்பகுதிக்குள் முன்னேற்றகரமாக எதையாவது செய்யாவிட்டால் பதவி விலகத் தயார் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

மகிந்த அரசாங்கத்துடன் நெருக்கிய நபரான தம்மிக்க நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தப் போவதாக தெரிவித்து அமைச்சு பதவியினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.