பொது இடத்தில் துப்பாக்கி எடுத்துச் செல்ல அமெரிக்க மக்களுக்கு அடிப்படை உரிமையை அரசியல் சாசனம் அளித்திருப்பதாக அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் அடிக்கடி நடைபெறும் திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களையடுத்து துப்பாக்கி வைத்திருக்கும் உரிமத்துக்கான வயது வரம்பை உயர்த்த அதிபர் ஜோபைடன் (Joe bidden) அரசு திட்டமிட்டது.
இதற்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் பாதுகாப்புக்காக அமெரிக்க குடிமக்கள் கையில் துப்பாக்கியை எடுத்துச் செல்லலாம் என்றும் நியாயமான காரணம் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர் என தெரியவந்துள்ளது.