இலங்கையில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஐந்து நாட்களாக வரிசையில் காத்திருந்த லொறி சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை இதுவரை சந்தித்திராத பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.
மேலும், அந்நாட்டில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பெற்றோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து முடக்கம் போன்ற சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறான சூழலில் இலங்கையின் மேற்கு மாகாணத்தில் இலங்கையில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் 5 நாட்களாக வரிசையில் காத்திருந்த 63 வயதான லொறி சாரதி உயிரிழந்துள்ளார்.
அங்குருவடோடா பகுதியில் தனது வாகனத்தில் வரிசையில் காத்திருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் எரிபொருளுக்காக காத்திருந்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் 43 முதல் 84 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களில் பலருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து உள்ளனர்.