உலகில் பல கோடி பயனர்களால் பாவிக்கப்படும் டெலிகிராம் செயலியில் இனி கட்டண சேவை அறிமுகப்படுத்த உள்ளனர்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் டெலிகிராம் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பயனர்களின் வசதிக்காக டெலிகிராமில் அவ்வப்போது பல புதிய மாற்றங்கள் வெளியாவது வழக்கம்.
இந்த நிலையில் தற்போது டெலிகிராம் செயலி தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெலிகிராம் செயலியில் புதிய பிரீமியம் பிளான் ஒன்றை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக குறித்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார்.
பிரீமியம் திட்டம் போன்ற பிரத்யேக வசதிகளை பயனர்கள் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் தற்போது டெலிகிராம் செயலையை பயன்படுத்தி வருபவர்களுக்கு எந்த கட்டணமும் இல்லாத பழைய நடைமுறையே தொடரும் எனவும் பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய பிரீமியம் பிளான் இந்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இலவச பயனர்கள் பிரீமியம் செலுத்துபவர்களிடமிருந்தும் பயனடைவார்கள் என்றே பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார்.