யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்தியிலுள்ள எரிவாயு விநியோக நிலையத்துக்கு, எரிவாயுபெற வந்த பொதுமக்களுக்கும் ,எரிவாயு விநியோகஸ்தருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவம் இடத்திக்கு வந்த கோப்பாய் பொலிஸாரின் தலையீட்டினால் நிலைமை சுமுகமானது. குறித்த எரிவாயு விநியோக நிலையத்துக்கு நேற்றிரவு எரிவாயு வந்திறங்கியதாக பொது மக்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து ,இன்று அதிகாலை முதல் விநியோக அலுவலகத்திற்கு முன்னால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
எனினும், எரிவாயு விநியோகஸ்தர், எரிவாயு இல்லை என தெரிவித்ததை அடுத்து அங்கிருந்தவர்கள் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் அங்கு கூடியிருந்த பொதுமக்களை விநியோக நிலையத்திற்குள் அழைத்துச் சென்றதுடன், உள்ளே எரிவாயு கொள்கலனை இருக்கின்றதா என பரிசோதித்த பின் நிலைமை சுகமானது.