கால்பந்து விளையாட்டின்போது சிறுவன் மீது மோதி விழுந்த அவுஸ்திரேலியா பிரதமர்

0
897

சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன், குழந்தை மீது ஓடி வந்து விழுந்தார்.

ஆஸ்திரேலியாவில் வரும் சனிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

பிரதமர் மந்திரி ஸ்காட் மாரிசனின் செல்வாக்கு குறைந்து வருவதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்ததை அடுத்து அவர் தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினார்.

டாஸ்மேனியா மாநிலத்தில் பிரச்சாரத்தின் நடுவே, சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மோதியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.