பிரதமர் இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை!

0
844

நாட்டு மக்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று விசேட உரையாற்றவுள்ளார் என தெரியவந்துள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான உண்மையான தகவல்களை மக்களுக்கு அறிவிக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பிலும் மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பல்வேறு நாடுகளின் தூதுவர்கள், சர்வதேச நாணயம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் ஆகியவற்றுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அத்தியாவசிய உணவு, மருந்து, உரம் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகிய செயற்பாடுகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் நெருக்கடி நிலைமையை வெற்றி கொள்வது தொடர்பில் சர்வதேச நாடுகளுடனான கலந்துரையாடலில் சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் மாதங்களில் தீர்மானமிக்க சரியான நடவடிக்கைகளை உரிய அர்ப்பணிப்புடன் மேற்கொள்வதன் மூலம் நாட்டை நிலையான தன்மைக்கு கொண்டு செல்ல முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் இன்றைய தினம் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.