இன்றைய ராசிபலன் {10 மே 2022}

0
960

மேஷம்

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்தினருடன் செலவிடக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.

ரிஷபம்

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய உத்திகளை கையாளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கணவன் மனைவி இடையே புதிய புரிதல் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும்.

மிதுனம்

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடினமான வேலைகள் கூட சுலபமாக முடிவடையும் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

கடகம்

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப கடமையில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைத்ததில் இருந்து வந்த இடையூறுகள் நீங்கும். கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். ஆரோக்கியம் சீராகும்.

சிம்மம்

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொல்லை கொடுத்து வந்த எதிரிகள் அவர்களாகவே விலகிச் செல்வார்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் சிறுசிறு சச்சரவுகள் நீங்கும். குடும்பத்துடன் ஒற்றுமையுடன் காணப்படுவீர்கள். சுய தொழில் விருத்தி காணும். உத்தியோகஸ்தர்களுக்கு கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் என்பதால் எச்சரிக்கை உணர்வு தேவை.

கன்னி

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையை தவறாமல் கடைபிடிப்பது நல்லது. தேவையற்ற அலட்சியம் இழப்புகளை ஏற்படுத்தும். தொட்டதெல்லாம் துலங்கும் என்பதால் சுபகாரியத் தடைகள் விலகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் உயரும்.

துலாம்

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு விஷயத்திலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மனதில் இருந்த நீண்ட கோரிக்கைகள் நிறைவேறும். உங்களுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வீண் பழிகள் ஏற்படும் என்பதால் எச்சரிக்கை தேவை.

விருச்சிகம்

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மன கவலைகள் நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் தேவையற்ற அலைச்சல் ஏற்படும் என்பதால் கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மன அமைதி இருக்கும்.

தனுசு

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் அதிகரித்து காணப்படும். எந்த ஒரு முக்கிய முடிவையும் சற்று தள்ளி வைப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் அனுகூல பலன் கொடுக்கும். உத்தியோகஸ்தர்கள் வெற்றி வாய்ப்புகளை குவிய இருக்கிறீர்கள்.

மகரம்

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சமுதாயத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் இறை சிந்தனையுடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் பெருகும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.

கும்பம்

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் வீண் விரயங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்தாலும் முக்கிய முடிவுகளை கவனமாக எடுப்பது நல்லது. உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தகுந்த சமயத்தில் நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். ஆரோக்கியம் சீராகும்.

மீனம்

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்து துணிச்சலுடன் காணப்படுவீர்கள். எவரையும் எதிர்க்கும் வல்லமை திறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களிடம் திறமைக்கு உரிய பாராட்டு வாங்குவீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை வலுவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை விலகும். ஆரோக்கியம் நல்ல முன்னேற்றம் இருக்கும்.