நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து பாதுகாப்புப் படை வீரர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளமைக்க உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கடும் கண்டனங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் அமைதியான போராட்டம் மீது கைவைக்க வேண்டாம் எனவும் அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுள்ளது.