இன்றைய ராசிபலன் {05 மே 2022}

0
548

மேஷம்

மேஷ ராசிக்கு உற்சகம் நிறைந்த நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வேலையை உற்சாகத்துடன் செய்வீர்கள். மாணவர்களுக்கு சாதகமான நாளாகவும், போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் வகையில் சாதக பலன் பெறுவீர்கள். உங்கள் முகத்தில் மகிழ்ச்சியும், ஜொலிப்பாக இருக்கும். அனைத்து தரப்பிலிருந்து மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் பெறுவீர்கள். முன்னேற்றம் காண கடினமாக உழைப்பீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியினர் மனதை ஒருமுகப்படுத்தி உழைக்க வேண்டிய நாள். நிதி ரீதியாக வலுவான நாளாக இருக்கும். புத்திசாலித்தனமாக வேலையை செய்ய திட்டமிடுங்கள். உங்கள் தொழிலில் பெரிய வெற்றி பெறலாம். அரசியல் விவகாரங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நன்றாக இருக்கும். குழந்தைகள் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்கு அதிர்ஷ்டம் கைகூடும். வேலைகளில் உங்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். எந்த துறையில் வேலை செய்தாலும் அதில் சிறப்பான பலனும், லாபமும் கிடைக்கும். வெற்றியின் உச்சத்திற்கு அழைத்து செல்லும் வகையில் உங்களின் பேச்சும், செயலும் இருக்கும். ஆன்மிகம், சமூகத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.

கடகம் 

கடக ராசிக்கு தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். கடின உழைப்பின் பலத்தால், உங்களின் கஷ்டங்களிலிருந்து மீள்வீர்கள். சொத்து, ஒப்பந்தம் சார்ந்த விஷயங்களில் நல்ல முடிவைப் பெறுவீர்கள். உங்கள் பணத்தை எச்சரிக்கையுடன் செலவிடுவீர்கள். வண்டி, வாகனம் வகையில் கவனம் தேவை.

சிம்மம்

சிம்ம ராசிக்கு அதிர்ஷ்டங்கள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் பேச்சில் இனிமையும், செயலில் நிதானமும் தேவை. சிறப்பான செயல்பட்டால் மற்றவர்களை உங்கள் பக்கம் ஈர்ப்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனத்தால் வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நல்ல பண வரவு, பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு லாபகரமான சூழ்நிலை இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்கு சிறப்பான நாளாக இருக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தால் பணியில் மேன்மையும், மேலதிகாரிகளால் பாராடும் கிடைக்கும். சிறிய முதலீடுகளால் எதிர்காலத்தில் பயனுள்ள லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.

துலாம்

இன்று துலாம் ராசிக்காரர்கள் தங்கள் ஆசைகளை பிறர் மீது திணிக்க முயற்சிக்கக் கூடாது. நிர்வாகம் தொடர்பான பணிகள் சீராக நடைபெறும். சில சங்கடம் தரக்கூடிய சூழ்நிலையால் வணிக பலவீனமாக இருக்கும். நல்லவர்களுடன் நல்லுறவு ஏற்படும். உங்களின் நற்பெயரும், கௌரவமும் உயரும். இன்று உங்கள் பழைய நண்பருடன் மகிழ்ச்சியாக உரையாட வாய்ப்புள்ளது. மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம். உங்கள் சொல், செயலில் கவனம் தேவை. புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்க தாமதமாகலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
விடா முயற்சி நிச்சயம் கைக்கொடுக்கும். முடிவைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் செயல்களில் கவனம் செலுத்தி உழைக்கவும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் உத்தியோகத்தில் தடைகளால் சிரமப்படுவார்கள்.

தனுசு

தனுசு ராசிக்கு நற்பலன்கள் அதிகமாக கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். தடைப்பட்ட காரியங்களை செய்ய முயல்வீர்கள். வணிகர்களுக்கு சற்று கடினமான நேரமாக அமையும். இருப்பினும் சோர்வடையாமல் முயலவும். வழக்கு தொடர்பான விஷயங்கள் இருந்தால், அவைகளில் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையைப் பார்த்து பாராட்டுவார்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

மகரம்

இன்று மகர ராசியினர் வார்த்தைகளால் மக்கள் செல்வாக்குப் பெறக்கூடிய நாள். தொழிலில் சூழ்நிலைகள் உங்கள் விருப்பப்படி அமையும். உங்களின் வியாபாரத்தில் முடங்கிக் கிடக்கின்ற சில வேலைகள் இன்று முடிக்க வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் ஒருவரின் ஆதரவு உங்களுக்குப் பலன் தரும். பெற்றோரின் அன்பைப் பெறுவீர்கள், பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். நண்பர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது எளிதாக இருக்கும்.இன்று மகர ராசியினர் வார்த்தைகளால் மக்கள் செல்வாக்குப் பெறக்கூடிய நாள். தொழிலில் சூழ்நிலைகள் உங்கள் விருப்பப்படி அமையும். உங்களின் வியாபாரத்தில் முடங்கிக் கிடக்கின்ற சில வேலைகள் இன்று முடிக்க வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் ஒருவரின் ஆதரவு உங்களுக்குப் பலன் தரும். பெற்றோரின் அன்பைப் பெறுவீர்கள், பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். நண்பர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது எளிதாக இருக்கும்.

கும்பம்

கும்பம் ராசிக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாளாக அமையும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வணிகர்கள் பெரிய முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். இன்று புதிய கொள்முதல் செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்காக உங்கள் பிஸியான கால அட்டவணையில் இருந்து நேரத்தை ஒதுக்கி, அவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உறவினர்களை சந்தித்து நலம் விசாரிப்பீர்கள்.

மீனம்

மீன ராசிக்கு நாளின் ஆரம்பம் சிறப்பாக அமையும். இன்று வேலை அல்லது குடும்ப மகிழ்ச்சிக்கு நல்ல நாளாக இருக்கும். வேலையில் நல்ல பணம் கிடைக்கும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். வணிக, வர்த்தகத்தில் குறிப்பாக நல்ல முடிவுகளைப் பெற முடியும். உங்கள் துறையில் பெரிய மாற்றம் ஏற்படலாம்.