இன்றைய ராசிபலன் {28 ஏப்ரல் 2022}

0
704

​மேஷம்

மேஷ ராசிக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். உங்களின் புத்திசாலித்தனம் உங்களின் பணியில் தென்படும். சிறப்பான செயல்பாட்டால் மேலதிகாரிகளின் அன்பையும், நற்பெயரையும் பெறுவீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். புதிய வேலைக்கு முயல்பவர்களுக்குச் சாதகமான நாளாக இருக்கும்.

​ரிஷபம்

ரிஷபம் ராசிக்கு தன்னம்பிக்கை தரக்கூடிய நாள். உங்களின் கடின உழைப்பால் கஷ்டங்களிலிருந்து மீள்வீர்கள். சொத்துக்கள், புதிய ஒப்பந்தங்கள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். சிறப்பான வருமானங்கள் இருந்தும் செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். வேலையில் நல்ல வெற்றி கிடைக்க ஏற்ற நாள், மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்.

​மிதுனம்

மிதுன ராசிக்கு சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் வேலையின் செயல்திறன் அதிகரிக்கும். தொழிலில் வெற்றியின் உச்சத்திற்குச் செல்லக்கூடிய நாளாக இருக்கும். பேச்சின் இனிமை இருக்கும். குடும்பத்தில் அன்பும், ஆதரவும் கிடைக்கும் நாளாகவும், மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். மன உறுதி அதிகரிக்கும். நெருங்கிய உறவினர்கள் மற்றும் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்


கடக ராசியினர் தங்களின் மனதை ஒருமுகப்படுத்தி வேலை செய்ய வேண்டிய நாள். இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. புதிய ஒப்பந்தங்கள், திட்டங்களை தொடங்க வேண்டாம். புத்திசாலித்தனமாக வேலை செய்து முடிப்பது அவசியம்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். குளிர்ந்த பொருட்களை பயன்படுத்துவதும், உட்கொள்வதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளவும்.

சிம்மம்

சிம்ம ராசியினர் உற்சாகத்துடன் கண்படுவீர்கள். மாணவர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள், அதிர்ஷ்டம் கூடும், வேலையில் உற்சாகத்துடன் இருப்பீர்கள். மாணவர்கள் போட்டித் துறையில் வெற்றி பெறுவார்கள். இன்று நீங்கள் உங்கள் பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது

​கன்னி

கன்னி ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் சாதகமாக அமையும். மங்களகரமான காரியங்கள் நடக்கும். உங்கள் பேச்சு இனிமையாக இருக்கும், இதன் காரணமாக மற்றவர்களை உங்கள் பக்கம் ஈர்ப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். உங்கள் விருப்பப்படி உங்கள் வேலைத் திட்டமிட்டு முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நன்றாக இருக்கும்.

​துலாம்

இன்று துலாம் ராசிக்காரர்கள் தங்கள் ஆசைகளை பிறர் மீது திணிக்க முயல வேண்டாம். நிர்வாகம் தொடர்பான பணிகள் எளிதாக முடிவடையும். இன்றைய சூழ்நிலை வணிக நடவடிக்கைகளுக்கு பலவீனமாக இருக்கும். நல்லவர்களுடன் நல்லுறவு ஏற்படும். உங்களின் நற்பெயரும் கௌரவமும் உயரும். குடும்பத்தினரின் ஆதரவை நீங்கள் நிச்சயமாகப் பெறுவீர்கள், எனவே மனம் தளராமல் சவால்களை எதிர்கொள்ளுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு மன மகிழ்ச்சி தரக்கூடிய நாள். குடும்பத்துடன் நல்ல நேரம் செலவழிப்பீர்கள், பயணங்கள் மகிழ்வைத் தரக்கூடியதாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்கு நல்ல தொடக்கமாக இருக்கும். கையில் எடுக்கும் எந்த வேலையிலும் வெற்றி பெறுவீர்கள். வேலையில் நல்ல பண ஆதாயம் உண்டாகும். பணத்தை சேமிக்க சாதகமான நாள்.

​தனுசு

தனுசு ராசிக்கு நாளின் முதல் பாதி அனுகூலமாகவும், இனிமையாகவும் இருக்கும். பிற்பாதியில் கூடுதல் கவனம் தேவை. வேலையில் சாதகமான முன்னேற்றம் ஏற்படும் மற்றும் குடும்ப மகிழ்ச்சிக்கான நல்ல நாளாக இன்று இருக்கும். இன்று, வணிகத்தில் நன்றாக சம்பாதிக்க முடியும், மேலும் சிறந்த ஒப்பந்தமும் கிடைக்கும். உங்கள் பணித் துறையில் பெரிய மாற்றம் ஏற்படலாம். இன்று புதிய வேலையைத் தொடங்குவது சாதகமாக இருக்கும். இன்று நீதிமன்ற வழக்குகளில் சாதக தீர்ப்பை எதிர்பார்க்கலாம்.

மகரம்

மகர ராசிக்கு உடல்நிலை இன்று மேம்படக்கூடிய நாள். கடினமான வேலைகளை முடிக்கக்கூடிய சாதகமான சூழல் நிலவும். உத்தியோகத்தில் வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். வணிகர்களுக்கு கடினமான நாளாக இருக்கலாம். ஆனால் சோர்வடைய வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணியை அதிகாரிகள் பாராட்டுவார்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். எந்தத் துறையிலும் உங்களை வெற்றியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்ல உதவும் பேச்சுக் கலை உங்களிடம் உள்ளது.

​கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வேலைகள் மெதுவாகவே நடக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் பெரிய முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். இன்று புதிய கொள்முதல் செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இன்று நீங்கள் நல்லவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வீர்கள். அவர்களின் ஆலோசனை வேலையில் வெற்றியை அடைய உங்களுக்கு உதவுவார்கள். இன்று மனம் மகிழ்ச்சியான நாள்.

மீனம்

மீன ராசியினர் வார்த்தைகளில் கவனம் தேவை. உங்கள் வார்த்தைகளால் மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள். தொழில் வாழ்க்கையில் சூழ்நிலைகள் உங்கள் விருப்பப்படி அமையும். உங்களின் வியாபாரத்தில் சாதகமான சூழலும், வேலைகளை சிறப்பாகவும் முடிக்க முடியும். நண்பர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வாய்ப்புகள் இருக்கும். இன்று நீங்கள் கல்வி மற்றும் போட்டித் துறையில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சாத்தியமான அனைத்து ஆதரவும் கிடைக்கும்.