இன்றைய ராசிபலன் {27 ஏப்ரல் 2022}

0
502

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு சீராக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் லாபகரமான பலன்களை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகப் பலன் கொடுக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தீட்டிய திட்டங்கள் நிறைவேறும் அற்புதமான நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சூட்சுமங்களை புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்களுக்கு பிள்ளைகள் வழியில் அதிர்ஷ்டங்கள் வரும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் தீர கூடிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் வாங்கிய கடனை அடைப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் உதவி கிடைக்கும். மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக நடந்து கொண்டால் முன்னேற்றம் நிச்சயம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நான் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை தெரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தைரியமான நாளாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மன உளைச்சல் நீங்கும். உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு வலுவான போட்டிகள் குறையத் துவங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் கவனம் இருக்கும். மற்றவர்களுடைய பாராட்டை பெறுவீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும் என்பதால் டென்ஷனுடன் காணப்படுவீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுலபமாக முடிக்க வேண்டிய சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சில இடையூறுகளைக் கடந்து வெற்றியை காணக்கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் கூடுமான வரை பொறுமை காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக உழைப்பைக் கொடுப்பது அவசியமாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் உற்சாகத்துடன் செய்யக்கூடிய நாளாக அமையும். உங்களை சுற்றியிருப்பவர்களின் மன நிலையை அறிந்து செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கடமை உணர்வு அதிகரித்து காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சுமூகமான சூழ்நிலை நிலவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும். வாங்கிய கடன்கள் முடிவுக்கு வரும் பாதையில் தெரியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய கை ஓங்கி இருக்கும். போட்டி பொறாமைகள் குறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளை செய்வதில் கவனத்துடன் செய்வது நல்லது. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபார ரீதியான முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருந்த அழுத்தம் நீங்கி நிம்மதி பிறக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வெற்றியைக் காண்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. நீங்கள் நம்பிய சிலவே ஏமாற்றக் கூடிய வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சகோதர சகோதரிகளின் வழி அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு வலுவாகும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.