இன்றைய ராசிபலன் {25 ஏப்ரல் 2022}

0
757

மேஷம்

 இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் குடும்பத்தில் அமைதி தவழும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் ஒரு சிலருக்கு இடமாற்றம் பற்றிய சிந்தனைகள் அதிகமாக ஏற்படும் இவைகளில் வெற்றி காண்பீர்கள்.

பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும் கலைத்துறை மீடியா துறை உணவுத்துறை போன்றவற்றில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் வருமானத்தையும் கூடுதலாகவே கொடுத்துவிடும் பொருளாதார பற்றாக்குறைகள் சீர்செய்யப்படும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள்.

ரிஷபம் 

இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும் கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும் எதிர்பார்த்து வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபடலாம் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்

 இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் பெண்களுக்கு முன்னேற்றமான நாளாகும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் இணக்கமான சூழ்நிலையை காண்பார்கள்.

கல்வியை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைப்பதற்கான நாள் ஆகும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் வெளிநாட்டு வேலை வாய்ப்பை நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் வெளிநாட்டில் வசித்து கொண்டிருப்பவர்கள் நிரந்தர குடியுரிமை மற்றும் கிரீன் கார்டு போன்ற காரியங்களை துவக்குவதற்கு இன்று நல்ல நாள் ஆகும்.

கடகம்

மாணவர்களின் கல்வித் திறன் பளிச்சிடும். வெளியூர்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். திருமணம் மற்றும் சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு.

தாய் வழி சொந்தம் வந்ததால் மற்றும் நண்பர்களால் தனவரவும் மன மகிழ்ச்சியும் கிடைக்கும். கணக்குத் துறை உணவுத்துறை மற்றும் சுற்றுலா துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. குழந்தைகளால் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

சிம்மம்

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் குடும்ப ஒற்றுமை மேம்படும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள் நல்ல நாளாகும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். புது சொத்துக்கள் வாங்குதல் அல்லது வீடு கட்டுவது வெளிநாடு செல்வது போன்ற சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும். இவற்றில் வெற்றியும் காண்பீர்கள்.

வாகனம் ஓட்ட கற்றுக் கொள்வதற்கு ஆரம்பிக்க நல்ல நாள் ஆகும். ஒரு சிலர் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பர் இவற்றில் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. தொழில் மாற்றத்தைப் பற்றி அல்லது இடமாற்றத்தை பற்றி சிந்திக்கும் நாடாக இன்றைய நாள் அமையும். ஒரு சிலருக்கு வெளிநாட்டிற்கு செல்வதற்கான நல்ல செய்திகள் வந்து சேரும். நாளாகும் தன வரவு உண்டாகும்.

கன்னி

சுபகாரிய பேச்சு வார்த்தைகளை ஓரிரு நாட்கள் தள்ளி வைப்பது வெற்றிக்கனியை பெறும் வழியை எளிதாக்கும். வயோதிகர்களுக்கு சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு விலகும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பெண்களுக்கு பொறுமையைக் கைக்கொள்ளும் நாளாக இன்றைய நாள் அமைகிறது. தங்களுடைய பிறந்த வீட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்றே அதிகமானாலும் பாராட்டு பெறும். அளவிற்கு கடின உழைப்பை போட்டு வெற்றி பெறுவீர்கள்.

துலாம்

அதிக நேரம் டிவி மொபைல் மற்றும் சோஷியல் மீடியாவில் நேரத்தை செலவழிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும். விநாயகப் பெருமான் வழிபாடு விக்கினம் தீர்க்கும். கணவன்-மனைவியரிடையே சிறு சிறு பிணக்குகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு என்பதால் வார்த்தையை அளந்து பேசுவது நல்லது.

ஒரு சிலருக்கு வலி நல்லது முதுகு வலி சிறிய அளவில் வந்து செல்லும். தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் மருத்துவ துறையில் இருப்பவர்கள் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பத்திரிக்கைத்துறை கலைத்துறை மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும்.

விருச்சிகம் 

அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும் கல்வியை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வேலை கிடைக்க வாய்ப்புண்டு பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும் குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும்.

உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை அடைவார்கள் சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள் கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் தங்கள் தொழிலில் நிலை உயரப் பெறுவார்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும்.

தனுசு

காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருந்தவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளும் தொழில் முன்னேற்றமும் ஏற்படும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல நிலைமையை அடைவார் குழந்தை பாக்கியம் போன்றவற்றை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் அது தொடர்பான வைத்தியங்களை ஆரம்பிக்கலாம்.

மகரம்

கூடுமானவரை தவிர்க்கலாம் உத்தியோக உயர்வு உத்தியோக மாற்றம் போன்றவற்றில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு என்பதால் இம்மாதிரியான முயற்சிகளை அடுத்து வரும் இரு நாட்களுக்கு தவிர்த்துவிடுவது நல்லது தவிர்க்க முடியாத செலவினங்களால் கையிலுள்ள இருப்பு குறைவதற்கு வாய்ப்பு உண்டு.

குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு என்று ஒன்றுமில்லை மூத்தவர்களுக்கு உடல் ரீதியான தொல்லைகள் ஏற்பட்டு விலகும் என்பதால் உணவு சார்ந்த விஷயங்களில் இவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

கும்பம்

இன்றைய நாள் சிறந்த நாளாகும் பங்கு வர்த்தக துறை சுற்றுலாத்துறை உணவுத் துறை போன்றவற்றில் வேலைவாய்ப்பு பார்ப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும் ஊதிய உயர்வு கிடைக்கும் ஒரு சிலருக்கு பிரயாணங்கள் வீண் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

உத்தியோக உயர்வை நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும் வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வீர்கள்குடும்பத்தில் உள்ள சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

மீனம் 

குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் அனுசரித்துச் செல்வீர்கள் வாகன வகையில் ஆதாயம் பெறுவீர்கள். ஒரு சிலர் சொத்துக்கள் வாங்குவது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு இருப்பீர்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்கள் வெற்றி தருவதாக அமையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் கடின முயற்சிக்கேற்ற பாராட்டுரைகள் கிடைத்துவிடும் விசா தொடர்பான காரியங்களை துவக்குவதற்கு இன்று நல்ல நாள் ஆகும் குடும்பத்தில் அமைதி தவழும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும்.