பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையை ஆளுங்கட்சி ஆரம்பித்துள்ளது.
113 உறுப்பினர்களின் ஆதரவை இலகுவில் பெற்றுவிடலாம் என பசில் தரப்பு கருதினாலும், மேற்படி பிரேரணையில் இன்னும் 100 எம்.பிக்கள் வரைகூட கையொப்பம் இடவில்லை என தெரியவருகின்றது.
இன்றைய தினமும் கையொப்பம் திரட்டப்படவுள்ளது. மேற்படி பிரேரணையில் 113 உறுப்பினர்கள் கையொப்பம் இடாவிட்டால், அடுத்த நொடியே பதவி விலகும் நிலை மகிந்தவுக்கு ஏற்படும்.
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் தற்போது 103 ஆசனங்கள் வரையே காணப்படுகின்றன. எனவே, பதவி துறக்கும் அறிவிப்பை மகிந்த விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மகாநாயக்க தேரர்கள் சங்க பிரகடனத்தை வெளியிட்டுவிட்டால், அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். எனவே, அந்த அறிவிப்புக்கு முன்னர் மகிந்த விலகக்கூடும் என தெரியவருகின்றது.