உத்தியோகப்பூர்வ இணையத்தளம் செயலிழந்துள்ளது:இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!

0
428

சிறிலங்கா காவல்துறை திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் செயலிழந்துள்ளதாக காவல்துறை திணைக்களம் அறிவித்துள்ளது.

இணையத்தளத்தை மீள வழமைக்கு கொண்டு வரும் செயற்பாடுகள் இடம் பெற்று வருவதாக காவல் துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.