சிம்பு சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட தகவல்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்

0
594

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

இதற்குமுன் இவர்கள் கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது உருவாகி வரும் இந்த கூட்டணியின் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர்.

மேலும், இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சிம்பு அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனை அவருடைய ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.