நெலுவ – எம்பலேகெதர வீதியில் பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட சிறுவனொருவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவனொருவனே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுவன் தமது தாயாருடன் பாலத்தை கடக்க முற்பட்ட போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
காவல்துறையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சிறுவனின் சடலத்தை மீட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.