தீவின் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள தாழ்வான கடல் பகுதியில் கொந்தளிப்பான தன்மை காணப்பட்டதால் இன்று காலை பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இவ் மழையுடனான காலநிலை ஏப்ரல் 14ஆம் திகதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று பிற்பகல் நாடு முழுவதும் பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.