பீஸ்ட் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா, லாபம் வருமா?

0
665

தளபதி விஜய்யின் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது.

பீஸ்ட் பட்ஜெட்

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் பட்ஜெட், டிஸ்ட்ரிபியூஷன் மற்றும் மார்க்கெட்டிங் குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் பட்ஜெட் மட்டுமே சுமார் ரூ. 165 கோடியாம். மேலும், டிஸ்ட்ரிபியூஷன் மற்றும் மார்க்கெட்டிங் இரண்டையும் சேர்த்து, மொத்தம் பீஸ்ட் படத்திற்கு ரூ. 175 கோடி செலவு என தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகும் பீஸ்ட் திரைப்படம் முதல் நாளில் உலகமுழுவதும், ரூ. 70 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

லாபம் வருமா? 

பீஸ்ட் வெளிவந்த அடுத்த நாளில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள கே.ஜி.எப். திரைப்படம் வெளியாகவுள்ளதால், தொடர்ந்து வரும் அடுத்தடுத்த நாட்களில் பீஸ்ட் படத்தின் வசூல் குறைய மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன.

இந்த நிலையில், பட்ஜெட்டை விட அதிக வசூல் செய்து லாபம் தருமா விஜய்யின் பீஸ்ட் என தற்போதே திரை வட்டாரங்களில் கிசுகிசுக்க துவங்கிவிட்டனர்.