தளபதி விஜய்க்கு ரசிகராக இருக்கும் பாலிவுட் நட்சத்திரங்கள்.. யார் யார் தெரியுமா?

0
713

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் மட்டுமே படங்கள் நடிக்கிறார் என்றாலும் அவரது எல்லா படங்களும் தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளில் டப் ஆகி தியேட்டர் மற்றும் தொலைக்காட்சியில் வருகின்றன. அது மட்டுமின்றி அவரது பாடல்களும் இணையத்தில் அவ்வப்போது

ஷாருக் கான்

பீஸ்ட் ட்ரைலரை பார்த்துவிட்டு ஷாருக் போட்ட ட்விட்டில் ‘அட்லீ போல நானும் விஜய்யின் ரசிகன் தான்’ என கூறி இருந்தார்.

ஹிரித்திக் ரோஷன்

விஜய்யின் டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும், நான் விஜய்யின் டான்ஸுக்கு தீவிர ரசிகன் என ஒரு பேட்டியில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் கூறி இருந்தார்.

பிரியங்கா சோப்ரா

விஜய்யின் தமிழன் படம் தான் பிரியங்கா சோப்ராவுக்கு முதல் படம். ஒரு கூல் ட்ரிங்க்ஸ் விளம்பரத்திலும் அவர்கள் இணைந்து நடித்து இருக்கின்றனர். விஜய்யை பார்த்து பல விஷயங்களை கற்றுக்கொண்டதாகவும், அதை ஹாலிவுட்டுக்கு சென்றாலும் பின்பற்றுவதாக பிரியங்கா சோப்ரா கூறினார்.

ஷாஹித் கபூர்

சமீபத்திய பேட்டியில் ஷாஹித் கபூர் தான் பெரிய விஜய் ரசிகன் என கூறி இருக்கிறார். அவரது ஜெர்சி படம் பீஸ்ட் உடன் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.

கத்ரீனா கைப்

விஜய் உடன் ஒரு விளம்பர படத்தில் நடித்து இருக்கிறார் கத்ரீனா கைப். விஜய் sweet and polite person என கத்ரீனா இதற்கு முன் பேட்டியில் கூறி இருக்கிறார்.

ஜாக்கி ஷ்ரோப்

பிகில் படத்தில் வில்லனாக நடித்தவர் இவர். தான் பார்த்ததிலேயே விஜய் ஒரு சிறந்த நடிகர் என அவர் கூறி இருந்தார்.

யாஷ்

கேஜிஎப் பட ஹீரோ யாஷ் சமீபத்திய ப்ரெஸ் மீட்டில் “விஜய் எனக்கு சீனியர். சினிமாவுக்காக பல விஷயங்கள் செய்து இருக்கிறார். அவரது படங்களை நான் கண்டிப்பாக பார்ப்பேன்” என கூறி இருக்கிறார்.

வருண் தவான்

விஜய்யின் பீஸ்ட் பட ஹிந்தி ட்ரைலரை வருண் தவான் வெளியிட்டார். தான் விஜய்யின் ரசிகன் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.