“இலங்கை வங்குரோத்து அடைந்து விட்டதாக உலகிற்கு காட்டுவது தவறு” – டயனா கமகே

0
680

இலங்கை வங்குரோத்து அடைந்த நாடு என உலகத்திற்கு காட்டுவது தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

எமது நாடு வங்குரோத்து அடையவில்லை. உலகில் ஏனைய நாடுகளை போல் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது. இப்படியான நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி நாட்டை ஆட்சி செய்திருக்குமாயின் நிலைமை இதனை விட மோசமாக இருந்திருக்கும்.

டொலர்கள் வானத்தில் இருந்து கொட்டாது, யார் ஆட்சிக்கு வந்தாலும் திட்டங்கள் இருக்க வேண்டும் எனவும் டயனா கமகே கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான டயனா கமகே தற்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகிறார்.