பிரதமர் பதவி தொடர்பில் ரணிலே உருவாக்கிய செய்தி! – எஸ்.எம்.மரிக்கார் தெரிவிப்பு

0
369

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட உள்ளதாக வெளியான செய்தி அவராலேயே உருவாக்கப்பட்ட செய்தி என ஐக்கிய மக்கள் மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ரணிலை பிரதமராக நியமிக்க உள்ளதாக வெளியான செய்திகள் முற்று முழுதான பொய்ச் செய்தி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், ஒரு நாடாளுமன்ற ஆசனம் கொண்ட கட்சிக்கு பிரதமர் பதவியை வழங்க முடியாது.

இடதுசாரி கொள்கைகளை உடைய விமல், வாசு, உதய கம்மன்பில போன்றவர்களுடன் ரணிலுக்கு இணைந்து செயற்பட முடியாது.

மக்களை திசை திருப்பும் வகையில் பிரதமர் பதவிக்கு ரணில் நியமிக்கப்பட உள்ளதாக சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் வெளியிடுகின்றன. அவ்வாறான செய்திகளை உருவாக்குவதில் ரணில் வல்லவர்.

ரணிலின் அரசியல் மற்றும் பொருளாதார அறிவினைக் கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.