உள்ளூர் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்திய கடனில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மூலபொருட்கள் விரைவாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என கைத்தொழில் அமைச்சின் முன்னாள் செயலாளர் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி செய்யப்படும் உபகரணங்களுக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதன்படி, நாட்டில் உள்ள கைத்தொழில்களுக்கு தேவையான பல அத்தியாவசிய மூலப்பொருட்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படும் என தயா ரத்நாயக்க உறுதியளித்துள்ளார்.