திய எதிர்கட்சியினை அமைக்கும் முனைப்பில் விமல் வீரவன்ச!

0
358

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தரப்பினர் புதிய எதிர்க்கட்சியொன்றை உருவாக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தினது பெரும்பான்மை பலத்தை இழக்கச் செய்வதே தமது நோக்கம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போது இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாடாளுமன்றில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவவதாகவும், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவும் தாமும் தற்பொழுது நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தாம் இதுவரையில் எதிர்க்கட்சியின் உறுப்பினராக செயற்படவில்லை. எதிர்க்கட்சியில் ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் அங்கம் வகின்றது.

எதிர்க்கட்சியில் புதிய பிரிவு ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சில தரப்புக்கள் இதற்கு ஆதரவினை அளிக்க இணங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.