நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு வேறு ஒரு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த நாட்டு அப்பாவி ஏழை மக்களுக்கு இவ்வாறான வலியை ஏற்படுத்த இந்த அரசாங்கம் தயாராக இருந்தால் நாமும் பாத யாத்திரையாக சென்று இந்த அரசாங்கத்தை உடனடியாக அனுப்ப வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்ல நேரிடும் என்பதனை தயக்கத்துடன் கூற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த அரசாங்கத்தின் நிர்வாகத்தையும் மேற்பார்வையையும் மீண்டுமொருமுறை பொறுப்பேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக செயற்படுவார். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு வேறு ஒரு அபிவிருத்தி அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும். அதற்கான படிகள் என்ன என்பது தொடர்பில் 31ஆம் திகதி மகா சங்கத்தினர் அபயராமயவில் கலந்து கொண்டு தீர்மானம் எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.