கூட்டுறவு சங்கத்துக்கான தேர்தலில் மோதல்! பொதுஜன பெரமுன தோல்வி..

0
365

குருநாகல்- குளியாப்பிட்டி கிழக்கில் நேற்று இடம்பெற்ற கூட்டுறவு சங்கத்துக்கான தேர்தலின்போது மோதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கூட்டுறவு சங்கத்தின் 6 உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர்.

நிர்வாகிகளுக்கான இந்த தேர்தலில் ஆளும் பொதுஜன பெரமுன கட்சி 67க்கு 25 என்ற வாக்குகள் அடிப்படையில் தோல்வியடைந்தது. இதனையடுத்தே சண்டை இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரண்டு தரப்பினர் மத்தியிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்