இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கையின் உயர்மட்ட தலைவர்கள் சந்திப்பு இன்று!

0
377
இலங்கை வைத்தியசாலை நிலை கண்டு மனம் கலங்கிய இந்திய வெளிவிவகார அமைச்சர்!

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையின் உயர்மட்ட தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதி, நிதியமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்கும் அவர், தமிழ் தேசியக்கூட்டமைப்பினருடன் சந்திப்பை நடத்தவுள்ளார்.

கூட்டமைப்பு ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்துள்ள நிலையில் ஜெயசங்கருடனான சந்திப்பு முக்கியத்தும் பெறுகிறது.

ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்காள விரிகுடா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான மாநாட்டில் (பிம்ஸ்டாக்) நாளை செவ்வாய்க்கிழமையன்று ஜெய்சங்கர் பங்கேற்கவுள்ளார்.

இந்தநிலையில் இலங்கையின் வெளியுறவு அமைச்சருடன் இடம்பெறும் சந்திப்பில் மிக முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன

ஏற்கனவே அண்டை நாடான இலங்கை பொருளாதார பின்னடைவில் இருந்து மீளெழும்புவதற்காக பாரிய கடன் உதவித்தி;ட்டங்களை அறிவித்துள்ளது. அத்துடன் முதலீட்டுத்திட்டங்களையும் அறிவித்துள்ளது.