அரசாங்கத்தின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் மீண்டும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்கனவே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்ததுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் தலையிட்டு அதனை தீர்த்து வைத்தனர்.
இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சில பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாக கருத்துக்களை வெளியிட்டு வருவதால் மீண்டும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமை காரணமாக பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் ஏற்கனவே அரச தரப்புக்குள் பலமுனைகளிலும் பிளவு நிலை ஏற்பட்டுள்ளது. உதய கம்மன்பில, விமல் வீரவங்க மற்றும் வாசுதேவ நாணயக்கார உட்பட 10 கட்சிகள் அரசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும் 10 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுயாதீனமாக செயற்பட போவதாக அறிவித்துள்ளனர். இதேவேளை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் அரசாங்கத்திற்கு நிபந்தனை விதித்துள்ளதுடன் சர்வ கட்சி மாநாட்டையும் புறக்கணித்திருந்தார்.