எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு! மக்கள் படும் இன்னல்

0
600

அனைத்து ரக பெற்றோலின் விலைகளையும் (25-03-2022) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, சகல விதமான பெற்றோல் வகைகளின் விலைகளும் 49 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் ஒன்றின் புதிய விற்பனை விலை 303 ரூபாயாகும்.

அத்துடன், ஒக்டென் 95 ரக பெற்றோல் ஒன்றின் புதிய விற்பனை விலை 332 ரூபாயாகும்.