இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்!

0
351

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்  (S.Jaisankar) உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.

இதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடும் நோக்கிலேயே அவர் இந்த பயணம் மேற்கொள்வதாக அறிய முடிகின்றது.

பொருளாதார நெருக்கடியினை சமாளிக்க இந்தியா இலங்கைக்கு நிபந்தனை அடிப்படையில் 1.9பில்லியன் டொலரினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.