சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி இடம்பெறும்!

0
368

கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரபத்திர சாதாரண தர பரீட்சைகள் திட்டமிட்டபடி மே மாதம் இடம்பெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2022 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்களில் 38 மில்லியனுக்கும் அதிகமானவை அச்சிடப்பட்டு பிரதான களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும்போது முழுமையாக பாடப் புத்தகங்கள் வழங்கும் பணிகள் நிறைவடையும் என்று குறிப்பிட்டார்.