எரிவாயு சிலிண்டர்கள் மீது மயங்கி விழுந்துள்ள முதியவர் வைத்தியசாலையில் அனுமதி!

0
510

கொழும்பு – தெஹிவளை பகுதியில் எரிவாயு பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் எரிவாயு சிலிண்டர்கள் மீது மயங்கி விழுந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திலிருந்த பொலிஸார் குறித்த முதியவரைக் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

தெஹிவளை காலி வீதி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்தில் காலை முதல் எரிவாயுவைப் பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதன்போது எரிவாயுவிற்காகக் காத்திருந்த முதியவர் ஒருவரே இவ்வாறு மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.