எதிரி யார், நண்பன் யார் என்பது இன்று தெரிந்து விடும்! உக்ரைன் ஜனாதிபதியின் அறிவிப்பு

0
387

நமது நண்பர் யார், எதிரி யார் என்பது இன்று தெரிந்து விடும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 

பிரஸ்ஸல்ஸில் இன்று நடைபெறவுள்ள அவசரகார உச்சிமாநாட்டில்  இது தெளிவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அதில், உக்ரைனின் நட்பு நாடுகள் போரில் தலையிடுவதைத் தடுக்க ரஷ்யா தனது பொருளாதார சக்தியைப் பயன்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டினார்.

“ரஷ்யர்கள் தங்கள் நலன்களைப் பாதுகாக்கத் தொடங்கியுள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். ரஷ்யாவுடன் அதன் சில கூட்டாளி நாடுகள் வேலை செய்கின்றன. இன்று நடைபெறவுள்ள ஜி7, நேட்டோ, ஐரோப்பிய ஒன்றிய மாநாடுகள் முக்கியமானது. அதில் நமது நிலைப்பாட்டை வலுவாக பிரதிநிதித்துவப்படுத்துவோம்,” என்று அவர் கூறினார்.

“இந்த மூன்று உச்சிமாநாடுகளில் யார் நண்பர், யார் கூட்டாளி, யார் பணத்திற்காக நம்மை ஏமாற்ற முடியும் என்பது தெளிவாகத் தெரியும்,” என்று ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பாவின் 40 சதவீத எரிவாயு விநியோகம் ரஷ்யாவில் இருந்தே இயக்கப்படுகிறது. ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரிப்பதற்கு முன் ஐரோப்பிய தலைவர்கள் மாற்று எரிசக்தி ஆதாரங்களைத் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி  வொலோடிமிர் ஸெலன்ஸ்கியும் காணொளி மூலம் பேசவிருக்கிறார். அப்போது யுக்ரேனில் படையெடுப்பை தீவிரமாக்கும் ரஷ்ய தாக்குதலை எதிர்கொள்ள கூடுதல் விமானம் மற்றும் விமான எதிர்ப்பு ராணுவ தளவாடங்களை வழங்குமாறு அவர் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.