உலக டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஆஷ் பார்ட்டி தனது 25 வயதில் ஓய்வை அறிவித்தார்!

0
417

உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஆஷ் பார்ட்டி(Ash Barty) தனது 25 வயதில் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

“நான் இதை எப்படிச் சொல்லப்போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை சொல்வது கடினம், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் இந்த முடிவு குறித்து தயாராகவே இருக்கிறேன்.

ஒரு நபராக என் இதயத்தில் இது சரியானது என்று எனக்குத் தெரியும்” என்றவாறாக சமூக ஊடகங்களில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு உணர்ச்சிகரமான வீடியோவில் ஆஷ் பார்ட்டி கூறினார்.

அவர் தனது மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டமான ஆஸ்திரேலிய ஓப்பனை(Australian Open) வென்ற இரண்டு மாதங்களுக்குள் இந்த அறிவிப்பு வந்துள்ளது.