உக்ரைன் படை அதிரடி -15 ஆயிரம் ரஷ்ய இராணுவம் கொன்று குவிப்பு

0
377

உக்ரைனில் ரஷ்ய இராணுவம் தரப்பில் இதுவரை 7000 முதல் 15 ஆயிரம் வரையிலான வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என நேட்டோ அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

உக்ரைன் அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இத்தகவலை நேட்டோ இராணுவ அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

இதற்கிடையே அப்பட்டமான பொய்களுடன் ரஷ்யாவுக்கு அரசியல் ஆதரவை சீனா வழங்குவதாக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் குற்றம்சாட்டி உள்ளார்.

அணு ஆயுதம் மற்றும் இரசாயன ஆயுத அச்சுறுத்தல்களுக்கு எதிராக உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவதற்கு நேட்டோ நட்பு நாடுகள் ஒப்புக்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.