இலங்கை மக்களுக்கு பேரிடியான செய்தி – மீண்டும் அதிகரிக்கவுள்ள விலைகள்

0
392

சுமார் 1,500 கொள்கலன்கள் பணம் செலுத்தி விடுவிக்க முடியாமல் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த பொருட்களை விடுவிப்பதில் ஏற்படும் தாமதத்திற்காக கப்பல்களுக்கு மேலதிக கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதால் பொருட்களின் விலை கிலோவுக்கு 10 முதல் 35 ரூபாய் வரை அதிகரிக்கும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய கடன் உதவியின் கீழ் குறித்த கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில்  நேற்று முன்தினம்(22) நிதி அமைச்சுடன் கலந்துரையாடப்பட்டதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

துறைமுகத்தில் சிக்கியுள்ள கொள்கலன்களில் கோதுமை மா, அரிசி, சீனி, கடலை மற்றும் மிளகாய் உள்ளிட்டவை அதிகளவில் காணப்படுவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த கொள்கலன்களுக்கான பணத்தை இந்திய ரூபாயில் செலுத்த வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதிக்கு முன்னர் கொள்கலன்களை விடுவித்துக் கொள்ள எதிர்ப்பார்ப்பதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.