மார்ச்2022
‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் மார்ச் 24- ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்.
மேஷம்
மனதில் அவ்வப்போது சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். அக்கம்பக்கத் தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் குறைவாகவே கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளுக்கு வாய்ப்பு ஏற்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயாரின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை.
ரிஷபம்
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உ றவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். மாலையில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படும். விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவால் காரியம் அனுகூலமாகும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
மிதுனம்
நண்பர்களுக்கு புதிய ஒப்பந்தங்களையும் புது முயற்சிகளையும் தவிர்த்துக் கொள்வது தேவையற்ற மன அழுத்தத்தில் இருந்து உங்களை வெளிக்கொண்டுவரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக அவற்றை எதிர்கொண்டு நல்ல பெயரை சம்பாதித்துக் கொள்வீர்கள் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று காலதாமதம் ஆவதற்கு வாய்ப்பு உண்டு.
சொந்த தொழில் செய்பவர்களுக்குச் சற்று பற்றாக்குறை இருந்து வந்தாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள் பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும் ஒரு சில பிரச்சனைகள் வந்தாலும் பெரிதாக மனதை பாதித்தது என்று இல்லை உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும் படிப்பில் கூடுதல் கவனம் தேவை.
கடகம்
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாடாகும் குடும்பத்தில் கணவன் மனைவி அன்னியோன்னியம் நன்றாக இருக்கும் உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை கிடைக்கும் திடீர் தனவரவு ஏற்படும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயம் கிடைக்கும்.
அது சம்பந்தப்பட்ட சிந்தனைகள் மனதை ஆக்கிரமிக்கும் வீட்டிற்கு தேவையான நல்ல பொருட்கள் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும் வாகன வகையில் ஆதாயம் உண்டு பங்குவர்த்தகத்தில் வங்கித் துறை சேவைத் துறை தங்கம் மற்றும் இரும்பு காப்பர் போன்றவற்றின் விலை உயர்வதற்கு வாய்ப்பு உண்டு மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும் விருந்தினர் வருகை போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு.
சிம்மம்
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும் வாகன வகை சொத்து சம்பந்தப்பட்ட வகையில் ஆதாயம் உண்டு உணவு தொழில் சுற்றுலா துறை சேவைத் தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் வெற்றிகரமாக இருக்கும் கணக்குத்துறை சீருடை பணியாளர்கள் மருத்துவத்துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள்.
வெற்றிகரமாக இருக்கும் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வரும் தொழிலை வெற்றிகரமாக முன்னேற்றிச் செல்வீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும் கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும் காதல் வயப்பட்டு இருப்பவர்களுக்கு இனிமையான நிகழ்வுகள் கிடைக்கும் நாளாக இன்றைய நாள் உண்டு.
கன்னி
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும் செய்யும் தொழிலில் மேன்மை கிடைக்கும் புது தொழில் முயற்சிகள் வெற்றி தருவதாக உணவுத்துறை சுற்றுலாத்துறை கலைத்துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு வெற்றி தரும் நாளாக இன்றைய நாள் அமையும். எதிர்பார்த்த தனவரவு உண்டு மனைவி உறவு மேம்படும்.
குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் வயதானவர்களுக்கு உடல் நலம் சீராக இருந்துவரும் உங்கள் பேச்சிற்கு மரியாதையும் அதிகரிக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மகிழ்ச்சி உண்டு வாகன வகையில் ஆதாயம் கிடைக்கும் வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு போன்ற நல்ல நிகழ்வுகளுக்கு அடித்தளம் அமைக்கும் நல்ல நாளாக இன்றைய நாள் அமையும்.
துலாம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கிறது தனவரவை அதிகப்படுத்தும் செய்யும் தொழிலில் வெற்றி காண்பீர்கள் புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் உத்தியோகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள் வங்கி தொழில் விஷுவல் மீடியா மற்றும் பிரிண்டிங் மீடியா போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் நல்ல பெயர் கிடைக்கும்.
மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும் பங்கு வர்த்தகத்தை பொருத்தவரை பில்டிங் புரமோட்டர்ஸ் ரியல் எஸ்டேட் அயர்ன் அண்ட் ஸ்டீல் போன்றவற்றில் முதலீடுகளை குறைத்துக் கொள்வது வங்கித்தொழில் மருத்துவத்துறை போன்றவற்றில் முதலீடுகளை அதிகப்படுத்துவதும் நல்ல லாபத்தைக் கொடுக்கும்.
விருச்சிகம்
நண்பர்களுக்கு நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும் சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை கிடைக்கும் செய்தொழிலில் முன்னேற்றம் உண்டு உத்தியோகத்தில் மிகுந்த முன்னேற்றம் கிடைக்கும் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.
வெளிநாடு மற்றும் வெளியூர் செல்வதற்காக உத்தரவுகள் மற்றும் விசா போன்றவற்றிற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல நிகழ்வுகள் உண்டு வெளிநாட்டு வாய்ப்புகள் உருவாகும் தகவல் தொழில்நுட்பத் துறை பத்திரிக்கை துறை பத்திரப்பதிவு கணக்குத் துறை மற்றும் அரசு துறை நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக செல்லும்.
புதிய வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை தொடர்பான தகவல்கள் சற்று காலதாமதம் ஆகும் இருப்பினும் நாளை நல்ல தகவல்கள் வந்து சேர வாய்ப்பு உள்ளது பெண்களுக்கு இனிமையான நாளாக இன்றைய நாள் அமையும்.
தனுசு
நேயர்களுக்கு இன்றைய நாள் வருமானத்தை தரக்கூடிய நல்ல நாளாக அமையும் எதிர்பார்த்த பணம் வரும் கடனை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு கடன் கிடைக்கும் புது தொழில் முயற்சிகள் வெற்றி கொடுக்கும் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றியை கொடுக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொள்ளும் சிறந்த நாளாகும்.
சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு சேவை துறை மற்றும் உணவுத்துறை சுற்றுலாத்துறை போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல பெயரை ஈட்டக்கூடிய நாள் இன்றைய நாள் ஆகும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு உங்கள் பேச்சுக்கு சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் ஏற்படும்.
மகரம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாடாக இருக்கும் திடீர் பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு வெளியூர் பயணத்தால் ஆதாயம் அடைவீர்கள் ஒரு சிலருக்கு வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வேலை வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பார்கள் அவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
சொந்த தொழில் முயற்சிகள் சற்று காலதாமதமாகும் சுயதொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக வாய்ப்பு உண்டு முக்கிய முடிவுகள் எடுப்பது மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது போன்றவற்றை சற்று தள்ளி வைப்பது நல்லது மாணவர்களின் கல்வி பளிச்சிடும் உடல் நலம் சீராக இருந்துவரும் தூக்கத்தில் நல்ல கனவுகள் வரும் பெண்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமான நாளாகவே இருக்கிறது.
கும்பம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும் வெளிநாடு வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும் தகவல்களும் வந்து சேரும் கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.
சொந்தத் தொழில் சிறப்பான மென்மை பெறும் சற்று பற்றாக்குறை இருந்து வந்தாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள் பிரயாணங்கள் தொடர்பான திட்டமிடுதல் இருக்கும் பெண்களுக்கு இனிமையான நாள் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் மாணவர்களின் கல்வி மேம்படும்.
மீனம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும் வாக்கு நாணயத்தைக் காப்பாற்றிக் கொள்வீர்கள் உங்கள் பேச்சுக்கு சமுதாயத்தில் மதிப்பும் அதிகம் வாகன வகை உணவு தொழில் விஷுவல் மீடியா மற்றும் பிரிண்டிங் மீடியா துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.
உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு கணவன் மனைவி உறவு சீராக இருந்துவரும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும் ஒருசிலர் புதிய வேலைவாய்ப்புகளை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை அமையும் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு குடும்பத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.