மலையகம் மற்றும் வடமாகாண வழித்தடங்களின் இன்டர்சிட்டி மற்றும் சிறப்பு தொடருந்து சேவைகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளதாக இலங்கை தொடருந்து பொது முகாமையாளர் தெரிவித்தார்.
இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி வரையிலான புதிய கட்டணங்களின் விபரம் பின்வருமாறு :
முதல் வகுப்பு – ரூ.1000
2ம் வகுப்பு – ரூ.500
3ம் வகுப்பு – ரூ.300
வடக்கு மாகாண விதி கட்டணங்கள்,
கொழும்பு கோட்டையிலிருந்து குருநாகல் வரையிலான முதல் வகுப்பு கட்டணம் 600 ரூபாயிலிருந்து 1000 ரூபவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரத்திற்கான முதல் வகுப்பு கட்டணம் 1200 ரூபாயில் இருந்து 1500 ரூபவாக அதிகரிக்கபட்டுள்ளது.கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலான முதல் வகுப்புக் கட்டணமும் 1400 ரூபாயிலிருந்து 1700 ரூபாவாக அதிகரித்துள்ளது