ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ள ஐரோப்பிய நாடுகள்!

0
375

உக்ரைன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பை ஆரம்பித்து ஒரு மாத காலத்தை அண்மிக்கும் நிலையில், ரஷ்யா மீது அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் பல, பொருளாதார தடை வித்துள்ளன.

அதேவேளை ரஷ்யாவின் எரிபொருட்களை கொள்வனவு செய்வதைற்கும் தடை விதித்துள்ன.

இவ்வாறான நிலையில், ரஷ்யாவை ஜி20 அமைப்பில் இருந்து விலக்குவதற்கான நடவடிக்கையை அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

காலநிலை மாற்றம் உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதை நோக்கமாகக் கொண்டு குறித்த அமைப்பு செயற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த அமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்க கோருவது மேற்கிலிருந்து ரஷ்யாவிற்கு எதிராக இருக்கும் பொருளாதாரத் தடைகளை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.

நேற்று செவ்வாய்க்கிழமை ரஷ்யாவை விலக்க வேண்டும் என்ற பரிந்துரையை போலந்து, அமெரிக்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சீனா, இந்தியா மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட பிற முக்கிய ஜி20 நாடுகள் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடக மாறக்கூடும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.