அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்படவில்லை எனவும், அது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக சமூக வலைத்தளங்களிலும், இணைய ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் குறித்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என ஜனாதிபதியின் பேச்சாளர் அறிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டதா என நேற்றைய தினம் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து வினவப்பட்ட போதே அமைச்சர் ரமேஷ் பத்திரண இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவது தொடர்பான எந்த விடயமும் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்படவில்லை.
அவ்வாறு எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படவுமில்லை. அத்தோடு அது தொடர்பில் எனக்கும் எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.